ஆண்கள் மிஸ் செய்வார்கள்

0
176

பெண்கள் என்றால் மென்மையானவள், பூ, புய்ப்பம், தேவதை, பால், நிலான்னு பல கற்பனை பிம்பங்கள் ஆணுக்கு இருக்கும். குறிப்பா டீன் ஏஜ்களில். ஆண் தடிமாடுகளுடன் கபடி, கிட்டிபுல்ன்னு ஆடிட்டு இருக்கும் ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ முதல் முறை பெண்ணின் ஸ்பரிசத்தை உணரும் போது, மெத் மெதென்று இருக்கும் அந்த கொழுப்பு நிறைந்த சதையும் வழு வழு என்றிருக்கும் முடிகளற்ற தோலும் அதை உண்மை என்றே நினைக்க சொல்லும்.

“எருமை மாடு, எங்க போனாலும் பின்பக்கமா டவுசரை கிழிச்சுட்டு வருதுன்னு” அம்மா கம்ப்ளைன்ட் சொல்லி, அப்பா தைத்து கொடுத்த மொடமொடப்பான காக்கி டவுசரையே போட்டு பழகிய ஆணுக்கு, ஒரு துப்பட்டாவோ, தாவணியோ கையில் பட்டால் அது தேவதையின் சிறகென்றே மூளையின் நியூரான்கள் சிக்னல் அனுப்பும். அப்பாவி மனமும் நம்பி விடும்.

ஒரு வழியாக முறையாக ஒரு பெண்ணை முழுமையாக தீண்டும் ஆணும் மிதமிஞ்சிய டெஸ்டோஸ்டீரான் அருந்திய மயக்கத்தில் இது தேவதை தான் எனவும், இல்லை இது பால் எனவும் இல்லவே இல்லை இது பாலில் செய்த தேவதை எனவும் மயங்கி கிடப்பான். ஒரு வழியாக தெளிபவன், தான் தேன் உண்ட வண்டு அல்ல. Fly trap’ல் மாட்டிய வண்டு என்பதை உணர்வான். இது தான் உலக நியதி.

இவ்வாறாக கற்பனை உலகத்தில் மயங்கி கிடந்த ஆணுக்கு இப்போதெல்லாம் பேரதிர்ச்சி கிடைத்து வருகிறது. போர்ன் படங்களில் செல்பி வீடியோக்காளை பார்த்தவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். (அனைவருமே பார்ப்பதால் அனைவருமே மறுக்க மாட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாம்)

Exhibitionistகள் தமது அங்க அவையங்களை வெளியில் காட்டிக் கொள்வதை விரும்புபவர்கள். சமூகத்தில் ஒரு 20% அவர்கள் இருக்கக் கூடும். அவர்கள் அங்கங்களை காண்பிப்பதை அனைவரும் பார்க்கும் வாய்ப்பு மிக குறைவு. ஆனால் நெட் வாழ்க்கையில் ஒரு சிலர் காண்பிக்கும் நிகழ்வுகள் பரவலாக எல்லோரும் பார்க்க கிடைத்து விடுகிறது. அதிலும் சில பல ஜிம்னாஸ்டிக் போஸ்களில் தேவதைகள் செய்யும் சேட்டைகள், கண்டிப்பாக போன தலைமுறை வரையிலான ஆண்களுக்கு மிகப்பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்டாகத் தான் இருக்கும்.

இன்றைய தலைமுறை, ‘பெண் தேவதை அல்ல, அனைத்து உணர்ச்சிகளும் கொண்ட சக மனுஷி தான்னு’ புரிந்து, தனது மூளையின் நியூரான்களை பரிணாமத்தில் மாற்றிக்கொள்ளக் கூடும். எவ்வளவோ பேர் முயற்சித்தும் உடைக்க முடியாத தேவதை பிம்பத்தை இந்த செல்போன் செல்விக்கள் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். “என்னுடைய டிமாண்ட் இது, முடிந்தால் செய், இல்லையேல் அந்த வாயில்லா காளை மாட்டை அடக்கிவிட்டு கம்முன்னு கிடன்னு” தெளிவாக சிக்னல் அனுப்புகிறார்கள். கோழி பிடிக்க சென்ற நரிக்கு இது நெருப்பு கோழின்னு புரிந்திருக்கும்…!

பட்டாம்பூச்சியின் சிறகினை ஒத்த மென் துனியில் நெய்த தாவணிகளும், சேலைகளும் குறைந்து ஒரே மாதிரியான முரட்டு ஜீன்ஸில் இருவரும் இருக்க, அந்த ஸ்பரிசங்களுக்கு அவன், வேறு என்ன தான் செய்ய முடியும்? தேவதையை ஒற்றிய கற்பனையும் அந்த முதல் ஸ்பரிசம் அளிக்கும் கிளர்ச்சியும் அதனால் கிடைக்கும் போதையும் எதிர்கால ஆண்கள் மிஸ் செய்வார்கள் என்பதை தவிர வேற ஒன்றும் குறை இல்லை…

– Sarav Urs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here