கலை உண்மையில் மக்கள் கைக்கு போகும் – 6அத்தியாயம்

0
233

ஒரு பொது நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் ஷேகர்கபூருக்கும் எனக்கும் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அவரிடம் கேட்டேன் “ உலகில் அதிகமாக திரைப்படம் தயாரிக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, ஆனாலும் உலக தரத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்ற படங்கள் நம்ம ஊரில் இருந்து வருவதில்லை ஏன் ?
ஷேகர் கபூர் சொன்னார் நம்ம ஊரில் பரிசோதனை முயற்சிகள் குறைவு. உலகிலேயே அதிக கதைசொல்லிகள் கொண்ட நாடு நம்முடையது. இருந்தாலும் கதை சொல்வதில் ஒரு Comfort Zoneல் இயங்குகிறார்கள். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்யும் பொழுதுதான் உலக வரிசையில் நாம் இடம்பிடிக்கமுடியும். உலக வரிசையில் வெற்றி பெற்றும் வரும் படைப்பாளிகளை பாருங்கள் அவர்கள் இந்த பரிசோதனை முயற்சியை செய்திருப்பார்கள் என்றார். நான் யோசித்து பார்த்தேன் அதில் ஏதோ உண்மை இருப்பதாகவே தோன்றியது.
6 அத்தியாயங்கள் படம் ஒரு சிறந்த பரிசோதனை முயற்சி, ஆறு இயக்குனர்கள் ஆறு கதை களங்கள் இருப்பதால் மட்டுமில்லை. பல இயக்குனர்கள் பல கதைகள் கொண்ட கதம்பங்கள் பல ஏற்கனவே வந்துவிட்டன. ஏன் தமிழிலேயே கூட கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸில் முயற்சித்துவிட்டார். ஆனால் 6 அத்தியாயம் இதிலிருந்து முற்றிலும் கொஞ்சம் மாறுபட்ட நிற்கிறது.
கதை களன், கதை சொல்லல் யுத்தி, கதையை திரையில் கையாண்ட யுக்தி, படமாக்கியவிதம் இப்படி இன்னும் சொல்லலாம். அதே ஷேகர் கபூர் அதே உரையாடலில் சொன்னார். படம் எடுப்பது இப்பொழுது மிகப்பெரிய சிரமமான காரியமில்லை. எனது காலத்தில் எனக்கு ஒரு சினிமா கேமரா வேண்டும்,பிலிம் ரோல் வேண்டும்,அதை டெவலப் செய்ய லெபாரட்டரி வேண்டும் அதைவிட எடுத்ததை திரையிட்டுப்பார்க்க ஒரு தியேட்டராவது வேண்டும். இப்பொழுது இது எதுவுமே வேண்டாம். நல்ல கதை இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கமுடியும். Film became common man tool என்றார்.
6 அத்தியாயத்தில் ஆறு கதைசொல்லிகள் இருக்கிறார்கள். அந்த ஆறு பேரும் ஆறுவிதமான பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். சினிமா ! சினிமா ! சினிமா ! என்று திரிபவர்கள் ஒரு டெம்ப்ளெட்டில் சிந்திக்கும் அபாயம் இருக்கிறது.
இந்த ஆறு பேருக்கும் சினிமா விருப்பமும் தொடர்பும் இருந்தாலும் எழுத்தாளர், மென்பொறியாளர் ( கள் ), டிஜிட்டல் மார்கெட்டிங் புரொபஷனல் , புகைப்படக்காரர், கேபிள் ஆபரேட்டராக இருந்து எழுத்தாளராக மாறியவர் என வெவ்வெறு முகங்கள். கதையும் படைப்பும் பல்வேறு இடத்திலிருந்து வரவேண்டும்.
அந்த விதத்திலும் பல மாறுபட்ட பிரதிபலிப்புகளை கொண்டுள்ளது 6 அத்தியாயம். ஒரே Genre ஐ பல்வேறு விதங்களில் யோசித்திருக்கிறார்கள்.
திகில் படம்தான் ஆனால் அதில் ரொமன்ஸ், ஹியுமர், சயின்ஸ், தத்துவம் என இத்தியாதி சமாச்சாரங்கள். சிந்தனை வேறுபட்டு மிளிர்கிறது. அதாவது மக்களிடம் இருந்து வரும் சினிமா. மக்கள் சினிமா இது.
இது வெற்றிபெரும் பொழுது நிச்சயம் இது இன்னொரு வாசலை பலருக்கு திறந்துவைக்கும். இது போன்ற படங்களுக்கு தியேட்டர் மட்டுமில்லாமல் அமேசான், நெட்பிலிக்ஸ், சன் நெக்ஸ்ட் போன்ற டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் ரெட்கார்பெட் விரிக்கவேண்டும். 6 அத்தியாயம் வெற்றிபெரும் பொழுது இன்னும் பல கதை சொல்லிகள் பல இடங்களில் இருந்து பிறப்பார்கள். மக்கள் சினிமா என்ற வார்த்தை மெய்ப்படும். கலை உண்மையில் மக்கள் கைக்கு போகும்.
இந்த கதைசொல்லிகள் கூட்டத்தில் என் பிரியமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அஜயன்பாலா, பொன்காசிராஜன்,கேபிள் ஷங்கர், என மக்களுக்கு பரிட்சையமான ஜாம்பவான்களும் சுரேஷ், ஒளிப்பதிவு ரமேஷ் என ஒரு நண்பர்கள் பட்டாளமே முன் நிற்கிறது.
வசீகர எழுத்துக்களுக்கும் சொந்தகாரரான அண்ணன் அஜயன்பாலாவும் புகைப்பட கலையில் என்னவெல்லாம் பரிசோதனை செய்ய முடியுமோ அதையெல்லாம் முயற்சித்து பார்த்திருக்கும் அண்ணன் பொன்காசிராஜனும் ஒரு கதையில் இணைந்திருக்கிறார்கள்.
விளையாட்டு பொடியனாக திரிந்துகொண்டிருந்த தம்பி கவுரிநாதன் இதில் ஒரு படத்தில் எடிட்டர் புரமோஷன். கொட்டும் மழையில் நிகழ்ந்த புரமோஷன் விழாவில் அந்த சின்ன பொடியனை மேடை ஏற்றி அழகு பார்த்தார்கள். நான் பார்வையாளர் வரிசையிலும் அவன் மேடையிலும் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருந்தது.,
இன்னொரு முக்கியமான விஷயம் ஆறு கதை சொல்லிகள் மட்டுமில்லை அதை சார்ந்து பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களும் இதன் மூலம் அறிமுகமாகின்றனர்.சினிமா உலகம் நிச்சயம் இவர்களை கொத்திக்கொள்ளும். இந்த ஆறுபடிகள் புதிய அத்தியாங்களை வாசலை திறந்துவைக்கட்டும்….!
– Raj mokan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here