ஜீ.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

0
111

நாச்சியார் படத்தில் நடித்த ஜி,வி.பிரகாஷ்க்கு குவிந்த வண்ணம் உள்ளது.

அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜீ.வி.பிரகாஷ் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. ‘நாச்சியார்’ படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத் தான் அழைக்கிறார் என்று தான் நினைத்தேன். ‘நீ தான் நடிக்கிற’ என்ற பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது.

‘நாச்சியார்’ படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே ‘நல்ல நடிகன்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா சார் மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா சார். அவருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here