சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு – டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்

0
58

இந்தி திரையுலகில் அமீர்கான் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் கொண்ட நடிகர். இவர், இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தவர்.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அவரது முதல் படமான  ‘கயாமாத் சே கயாமத் டக்’ திரைப்படத்தை மீண்டும் திரையிடும் நிகழ்ச்சி படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கான், நிகழ்ச்சிக்கு டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்திருந்தார்.
அவரது முதல் படத்தின் வெற்றிக்கு டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதை நினைவு கூர்ந்தே அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் உரையாடிய அமீர்கான், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அமீர்கானின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்துள்ளார். #Aamir Khan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here