தாயாகப் போகும் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை கல்யாணி!

0
39
 பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை கல்யாணி தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகப் போகிறாராம்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தூள் கிளப்பியவர் நடிகை கல்யாணி. நடிகையை தாண்டி தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார். நடுவில் அம்மாவின் மரணம், கல்யாணம் போன்ற விஷயங்களால் சினிமாவை தள்ளி வைத்தார். பிறகு மீண்டும் நடிக்க வந்த அவர் மறுபடியும் காணாமல் போய்விட்டார்.

இதுகுறித்து கல்யாணி கூறுகையில், ‘‘கல்யாணத்துக்காக பிரேக் எடுத்தேன், இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகப் போகிறேன் என்ற சந்தோஷமான விஷயத்துக்காக சினிமா பக்கம் வரவில்லை. இந்த நேரத்தில் என் அம்மாவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். என் அம்மாவே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்’’ என்றார் கல்யாணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here