கேன்ஸ் – பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம்

0
43

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் போராட்டம்

'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம்

திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Presentational grey line

அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும்அரசியல் பதற்றம்

அதிகரிக்கும் அரசியல் பதற்றம்

சிக்னலில் நிக்காமல் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்க ராஜிய அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

அமெரிக்க ராணுவ இணைப்பு அதிகாரியான கோல் ஜோசஃப் இமானுவேல் ஹாலை அழைக்க அமெரிக்கா, விமானம் ஒன்றினை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால், அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கோல் ஜோசஃப் ராஜதந்திர விவகாரங்களில் இருப்பதினால் அவரை கைது செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here