கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சி ‘டீசர்’ இன்று ஒளிபரப்பு

0
32

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான டீசர் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஆரவ், ஜுலி என பலர் பிரபலம் ஆனார்கள்.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசனே நடத்தவிருக்கிறார். கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சியின் டீசருக்கான படப்பிடிப்பு ஏவிஎம் அரங்கில் நடந்தது. அந்த டீசர் இன்று முதல் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பங்கேற்பாளர்களுக்கான தேர்வுகளும் நடந்துவருகின்றன. ஜுன் 25 முதல் செப்டம்பர் 30 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு. #BiggbossTamil2 #KamalHaasan #BiggBossSeason2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here