தனுஷின் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’

0
18

தனுஷின் ஹாலிவுட் படம், ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாக இருக்கிறது.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகியுள்ளது. காமெடி அட்வெஞ்சரான இந்தப் படம், வருகிற 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

இதை தமிழிலும் வெளியிட விரும்பிய தனுஷ், தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார். அவர்களும் தனுஷின் கோரிக்கையை ஏற்று, தமிழில் வெளியிடுகின்றனர். ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் இந்தப் படம் தமிழில் வெளியாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் தனுஷ்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊதுங்கடா சங்கு’ பாடலில் இடம்பெறும் வரி தான் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’. தான் எழுதிய இந்த வரியையே தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக வைத்துவிட்டார் தனுஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here