DIARY MILK காதல்…

0
150

எப்பொழுதும் இதற்கான பதிலை இந்த சமூக கட்டமைப்பு நமக்கு தந்திருக்காது. இந்த கேள்வியை உங்கள் குடும்பத்தில் யாரிடமேனும் கேட்டுப்பாருங்களேன் .ரொம்ப முக்கியம்ம்ம்.. என்ற பதிலையோ இப்ப இப்படி ஒரு
கேள்வி தேவையானதா என்ற பதிலையோ தருவார்கள்.

காதல் என்றால் என்ன என்று நான் எனக்குள் கேள்வி கேட்டுக்கொள்ளாத நாட்கள் இருக்கிறது.

ஆம் அது பள்ளி பருவம். காதல் தான் எல்லாமே .ஒரே ஒருவரை மட்டும் தான் காதலிக்க வேண்டும் என்பது சட்டம் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் அது.

ரெட்டைச்சடை போட்ட வயசில ஒருத்தனை மனசுக்கு பிடிக்கும். பிடிக்கும் என்றால் காதலிக்கனும் என்று தோண்றும். தினமும் டைரி மில்க் சாக்லேட் ல .DIARY MILK என்றால் daily always i remember you என்ற வாசகம் எழுதி கைக்கு வரும். நாமளும் நல்லா மொக்கிட்டு ஓரப்பார்வையில் வெட்கத்தோடு ?? உதட்டை மட்டும் லேசா விரித்து சிரிச்சிட்டு அந்த டைரி மில்க் சாக்லேட் கவர பை நிறைய பத்திரப்படுத்துறேன்னு சேர்த்துவச்சிக்கிட்டு ன்னு சைக்கில்ல சுத்தி சுத்தி பார்வையை மட்டும் பரிமாறிக்கிட்டிருக்கும் போது..அப்படியே க்ளோஸ் அப்பில் அப்பாவும் அண்ணாவும் முறைக்கும் மூஞ்சி நினைவிற்கு வரும்.

சின்னபுள்ளையாட்டம் அப்பா அடிப்பாங்க அண்ணா கொன்றுவாங்க இதெல்லாம் தப்புன்னு கண்ணத்தில போட்டுக்கிட்டு மூக்கு வழிய அழுது பொறண்டு ஏதோ பாவத்த செஞ்ச மாதிரி சிவபெருமான்கிட்ட பாவ மன்னிப்பு கேட்டு நெற்றி நிறைய பட்டையோட சுத்தின காலம் அது.

அடுத்தும் ஒரு காலம் இருக்கு. கல்லூரி காலம். இப்போ காதல் மேல் இருக்கிற பார்வை மாறி இருக்கும். சரியான நபரா தேர்வு செய்யனும் னு மட்டும் தோணும். ஆனால் சரியான நபர்னா எப்படி இருப்பாங்கன்னு நமக்கு தெரியாது. திடீர்னு வீட்ல கண்காணிப்பு பட்டியல்ல நம்மள வைப்பாய்ங்க. இடையில இடையில அம்மா சொல்லுறது வேற நமக்கு நியாபகம் வரும். படிப்பு தான் வாழ்க்கை கவனமா இருக்கனும் னு தோணும்.

அடுத்து என்ன..படிப்பு தான் வாழ்க்கை ன்னு சொல்லிச்சொல்லி படிப்பு முடிந்ததும் கல்யாணம்னு ஒன்ன செஞ்சு வைப்பாய்ங்க.என்ன படிப்பு என்ன வேலை .நல்ல குடும்பமான்னு பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்பாங்க. இனிமேல் இது தான் உன் வாழ்க்கை ன்னு சொல்லுவாங்க. அப்போ படிப்பு தான வாழ்க்கைன்னு சொன்னீங்க ன்னு நமக்கு கேள்வி வரும். கல்யாணம் தான் வாழ்க்கைன்னு சொல்லுவாங்க. ஓ சரி சரி ன்னு நாமும் தலையாட்டி வைப்போம்.

பிறந்து வளர்ந்ததில் இருந்து கவலைன்னா என்னன்னு தெரியாமல் இருக்கும் நமக்கு
அந்த நாள்ல இருந்து ஒன்னு புரிய வரும். உண்மையாகவே கல்யாணம் தான் வாழ்க்கைன்னு .

அப்போ கல்யாணம் பன்னாதவங்க எல்லாம் வாழலயா ன்னு நீங்க கேட்கலாம். எத்தனை பேர் நிறைவான வாழ்க்கை வாழ்றாங்கன்னு கையை தூக்க சொன்னா தெரியும்.

இங்கே எதைப்பார்த்து திருமணம் முடிக்கப்படுகிறதோ அதைக்கொண்டு அன்பையோ அதைக்கொண்டு காதலையோ அதைக்கொண்டு மகிழ்ச்சியையோ ஒருவருக்குள் கொண்டு செல்ல முடியாது என்ற உண்மை விளங்கும்.

கல்யாணத்திற்கும் காதலுக்கும் சம்பந்தமே இல்ல என்று நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்ற உண்மை புரிய வரும் போது நீங்கள் காதல் இல்லாத ஒரு கல்யாண வட்டத்திற்குள் சிக்கி இருப்பீர்கள். அந்த வட்டத்துக்குள் நின்று கொண்டே அன்பு செய்தல் என்பது இங்கு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்.

பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ‘ஏற்றுக்கொள்ளுதல்’ என்ற அடிப்படையில் நகர்கிறது. அதாவது v r different but v r accepting each other என்பது தான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஃபார்முலாவாக கல்யாண அமைப்பு நமக்கு சொல்லும் பாடம்.

டேய் எனக்கு கதை பிடிக்கும் ஆனால் அவருக்கு பிடிக்காது .அதைப்பற்றி என் நண்பரிடம் தான் பேச முடியும் என்பதில் தொடங்கி பகிர்தல் என்ற விசயமே இங்கே நண்பர்களுக்குள்ளாக மட்டுமே நடக்கிறது. அப்போ எதுக்குடா கல்யாணம் செஞ்சு வச்சீங்கன்னு கேட்டா Sex னு பதில் வரும். டேய் டபரா தலையா sex ல தாண்டா அதிகமா காதல் இருக்கனும். காதல் இருந்தாதான்டா செக்ஸ் னா நம்மள பைத்தியம் மாதிரி பார்ப்பாய்ங்க..அப்போ நமக்கு என்ன புரிய வரும்னா நம்ம அத்தை பாட்டி ன்னு சொந்தத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் செக்ஸ் என்பதை ஒரு கடமையாக கடந்து வந்திருக்கிறார்கள் என்பது புரியும். அந்த விவாதத்தில் ஒரு அம்மா என்ட்ரி ஆகும். தினம் பாத்திரம் கழுவுற மாதிரி தினம் பெட்ல படுக்கனும். இது ஒரு வேலை மாதிரின்னு சொல்லிட்டு போவாங்க.அப்டியே நமக்கு தலை சுத்தும்.

அப்போ ஒன்னு புரியும். இங்க காதல் தான் எல்லாமே ன்னு.
படிப்பு , பணம், பதவி ன்னு எதைக்கொண்டும் காதலின் இடத்தை நாம் நிறப்பிவிட முடியாது.

நாம் எல்லோரும் வம்பிழுத்து விளையாடி சாதரணமாக கடக்கும் காதல் பற்றிய பேச்சுக்கள் வெறும் சாதாரணமானவை அல்ல. அது மட்டுமே வாழ்க்கையின் அர்த்தம். காதலால் மட்டுமே உங்களுக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிறப்ப முடியும்.

தயவு செய்து பலரையும் போல் நீங்களும் ஏமாறாமல் காதலித்துவிடுங்கள்.அந்தக் காதலை உங்களது சொந்தமாக்கிவிடுங்கள்.

ஏனென்றால் உண்மையில் கல்யாணம் தான் வாழ்க்கை. காதல் தான் கல்யாணத்தின் வேர் !!
-Preetha Nila

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here