ரூ.7.53 கோடி வசூல் பெற்று 5வது இடம்: புதிய சாதனை படைத்த ராஸி!

0
35

பாலிவுட்டில் வெளியான ஆலியா பட்டின் ராஸி முதல் நாளில் மட்டும் ரூ.7.53 கோடி வசூல் படைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ராஸி. 2015ம் ஆண்டு வெளியான தல்வார் படத்தைத் தொடர்ந்து பெண் இயக்குனரான மேக்னா குல்சர் இயக்கிய இப்படத்தில் ஆலியா பட் ஹீரோயினாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு மருமகளாக செல்லும் அலியா பட் உண்மையில், அவர் ஒரு இந்தியப் பெண் உளவாளி. இவருடன் இணைந்து விக்கி கௌசல், ரஜித் கபூர், ஷிஷிர் சர்மா, ஜெய்தீப் ஆலாவத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் ரூ.7.53 கோடி வசூல் படைத்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது பாலிவுட்டில், முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த படங்களில் ராஸி 5வது இடம் பிடித்துள்ளது.

ராஸி மினி விமர்சனம்

இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் வெளியான சோனு ஹி டைடு ஹி ஸ்வீட்டி (ரூ.6.18 கோடி), ஹிக்கி (ரூ.3.31 கோடி) மற்றும் அக்டோபர் (ரூ.4.18 கோடி) ஆகிய படங்கள் ஓரளவு மட்டும் வசூல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1970-களின் காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறான இசையை சங்கர்-இஷான்-லாய் கூட்டணி சரியாக வழங்கியுள்ளது. சுபர்தா சக்கரவர்த்தியின் கலை அரங்க அமைப்பு பாகிஸ்தானை கண் முன் காட்டுகிறது. அதற்கு ஏற்றவாறு மாக்ஸிமா பாசு கோலானியின் ஆடை வடிவமைப்பு சரியாக கதாபாத்திரங்களோடு பொருந்துகிறது.

ஆலியா பட் திரைவாழ்க்கையில் ராஸி நிச்சயம் சரியான தேர்வு தான். அப்பாவியான பெண்ணாக இருந்து, கதையில் அவர் எடுக்கும் அதிரடி அவதாரம் வரை சரியாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் பல அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தாலும், ஆலியா தான் ராஸி-யின் கில்லி.

ஒரு அதிரடியான, சீட் நுனி த்ரில்லர் என்று மட்டுமில்லாமல் ஒரு போர் என்று வந்தால் அதில் பாதிக்கப்படும் சமூகத்தின் நிலையையும் இயக்குனர் மேக்னா குல்சர் ராஸி படத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படம் இறுதிவரை டென்ஷன் மற்றும் த்ரில்லுடன் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்துடன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here