அரசியலுக்கு வரும் ஆர்.ஜே.பாலாஜி! கட்சிக்கொடி, சின்னம் வெளியீடு?

0
40

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை டிபியாக வைத்துள்ளார்.

பிக் எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இதுதவிர, அவ்வப்போது சமூகப் பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகப் பணி குறித்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18ஆம் தேதி, ஆர்.ஜே.பாலாஜி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக சுவர் ஓவியங்கள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த விளம்பரத்தில் ’இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வரவேற்கின்றோம்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்.ஜே.பாலாஜியின் கட்சி அறிவிப்பு பற்றிய சுவர் ஓவியம்

இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில், கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை டிபியாக வைத்துள்ளார். அந்த டிபியில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், கொடியின் மையத்தில் பசுவின் சின்னமும் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here