‘காலா’ என பிரிண்ட் செய்யப்பட்டப் புடவையை அணிந்துவந்த சந்தோஷ் நாராயணன் மனைவி

0
28

‘காலா’ என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்துவந்து, இசை வெளியீட்டு விழாவில் அனைவரையும் கவர்ந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மனைவி மீனாட்சி.

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், லதா ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த், கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், பாலாஜி மோகன் எனப் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவர், தன் மனைவி மீனாட்சியுடன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். ‘காலா’ என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை மீனாட்சி அணிந்து வந்துள்ளார். இது, இசை வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள அனைவரையும் கவர்ந்துள்ளது.

மொத்தம் 9 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில், ‘நிக்கல் நிக்கல்’ என்ற பாடலை டோலடெலிக்ஸுடன் பாடி, முதன்முதலாகப் பாடகராக அறிமுகமாகியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக். விழாவிலும் நேரடியாகப் பாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள 8,500 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த விழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். இதனால், அண்ணா சாலையே ஸ்தம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here