சிவகார்த்திகேயன்-ராஜேஷ் படத்தின் இசையமைப்பாளர் யார்?- வெளியான தகவல்

0
12

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். தற்போது பொன்ராம்இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துவரும் அவர் அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ராஜேஷுடன் கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த தகவலை கூட அவர் அண்மையில் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஜுலையில் இருந்து தொடங்க போகும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, விவேக் ஹர்ஷன் எடிட்டிங்கை செய்கிறார்.

தற்போது இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here