இவர்தான் நடிகை சுகன்யாவின் மகளா?

0
14

இதுவரை வெளிவராத நடிகை சுகன்யாவின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை சுகன்யா 1991ல் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின் வரிசையாக விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் இவர் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அதிகமாக நடித்தார்.

இப்படி பிஸியாக நடித்து வந்த நடிகை சுகன்யா, ஒரு கால கட்டத்தில் காணாமல் போய்விட்டார். அவருக்கு யாருடன் திருமணம் ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை. தற்போது அவ்வப்போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் தலையை காட்டி வருகிறார்.

இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவருடைய மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here