விஜய் அவார்ட்ஸில் ‘விவேகம்’ படம் தேர்வு?!

0
23
விஜய் டிவி நடத்தி வரும் விஜய் அவார்ட்ஸில் அஜீத்தின் ‘விவேகம்’ படம் தேர்வாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜீத்துக்கு பலமே அவரது ரசிகர்கள்தான். அவர்கள் இல்லையென்றால் அஜீத் இல்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் அவர் மீது அதிக பாசம் வைத்துள்ளனர். அஜீத் படங்கள் வெற்றியோ, தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாமல் அஜீத்திற்காக எப்போதுமே குரல் கொடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட விருது விழாக்களில் ஒன்று விஜய் டிவி நடத்தும் ‘விஜய் அவார்ட்ஸ்’. இந்த விருது விழா தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

தற்போது சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குனர் என நான்கு விருதுகளுக்கு அஜீத் நடித்த ‘விவேகம்’ படம் தேர்வாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here